பண்ருட்டியில் சந்தன கூடு திருவிழா
ADDED :2227 days ago
பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள லாரப்ஷா தர்காவில் சந்தனகூடு திரு விழா நடந்தது.பண்ருட்டி, நான்குமுனை சந்திப்பு, கடலுார் சாலையில் உள்ள லாரப்ஷா தர்கா வில் சந்தன கூடு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.உருஸ் என்னும் கந்துாரி விழா நடந்தது. விழாவிற்கு லாரப்ஷா தர்கா பரம்பரை முத்தவல்லி பாதுஷா தலைமை தாங்கினார். இதில் முத்தவல்லி ஹிராலால், பானுாபா ரிபாய் ஜமா அத்தார்கள், வியாபாரிகள், கலந்து கொண்டனர்.