உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி திம்மராய சுவாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

கிருஷ்ணகிரி திம்மராய சுவாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

கிருஷ்ணகிரி: தாதனூர், திம்மராய சுவாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா  நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த தாதனூரில், பல ஆண்டுகளாக  சிதிலமடைந்து இருந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சுவாமி கோவில்,  சமீபத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர், 26 நாட்களுக்கு தினமும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது. மண்டல பூஜை நிறைவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, கோவிந்தா கோஷத்துடன் விளக்குத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. மண்டல பூஜை நிறைவு விழாவில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா  மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு அர்சுனன் தபசு  தெருக்கூத்து நாடகம் நடந்தது. அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.  ஏற்பாடு களை கோவில் தர்மகர்த்தா கோடியூர் கணேசன், விஜய ராகவன், சங்கர்  ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !