அத்தி வரதர் அலங்காரத்தில் அம்பாள்
ADDED :2228 days ago
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்பாள் அத்திவரதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் தினம் வருகின்றனர்.இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் நவராத்திரி ஏழாவது நாளை முன்னிட்டு பிரணம்பிகை தாயார் அத்திவரதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.