உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி கோவிலில் கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்

வடபழநி கோவிலில் கம்பாநதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்

 சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலு விழாவின், ஏழாம் நாளான நேற்று, கம்பாநதி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி, ஏழாம் நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சக்தி கொலுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி, துர்கா ஸ்டாலின் பங்கேற்று தரிசித்தார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, சித்திரமாயா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது.மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சூக்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.மாலை, 7:00 மணிக்கு நடந்த பொதுமக்கள் கொலு பாட்டு நிகழ்ச்சியில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஸ்ருதி சேகரின் பாட்டு, பார்வையாளர்களை கவர்ந்தது.நேற்று முன்தினம், ஞானத்தை பெற சக்தி கொடு என்ற தலைப்பில், சுவாமிநாதனின் சொற்பொழிவும், நேற்று மாலை, 7:00 மணிக்கு, அறிவு பெற சக்தி கொடு எனும் தலைப்பில், தேச மங்கையர்கரசியின் சொற்பொழிவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !