உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேசப்பெருமாளுக்கு ஐந்தாயிரம் லட்டு நைவேத்யம்

வெங்கடேசப்பெருமாளுக்கு ஐந்தாயிரம் லட்டு நைவேத்யம்

செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேசபெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ அலங்காரம் செய்தனர்.

செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேசபெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தங்க அங்கி மற்றும் துளசி மாலை அலங்காரம் செய்தனர். காலை 9 மணிக்கு 5 ஆயிரம் லட்டுக்களை கொண்டு நைவேத்யம் நடந்தது. இதேபோல் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !