உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூரில் கருடசேவை

உத்திரமேரூரில் கருடசேவை

உத்திரமேரூர்:உத்திரமேரூர், பஜனைக் கோவிலில், 22ம் ஆண்டு, கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர், கருணீகர் தெருவில், பஜனைக் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டு, புரட்டாசி மாத உற்சவம், கடந்த, 3ம் தேதி, பந்தக்கால் நடுதலுடன் துவங்கியது.நேற்று முன்தினம், மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கருடசேவை உற்சவமான நேற்று, காலை, 6:30 மணிக்கு, கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.மாலையில், சிலம்பாட்டமும், அதைத் தொடர்ந்து, சறுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !