நவராத்திரி விழாவில் அம்மனுக்கு ரூ.35 லட்சம் நோட்டு அலங்காரம்
ADDED :2230 days ago
ஆரணி: ஆரணியில், நேற்று நடந்த நவராத்திரி விழாவில், 35 லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும், 150 பவுன் நகை கொண்டு, அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அறம்வளர் நாயகி உடனாகிய கைலாயநாதர் கோவில் உள்ளது. கடந்த, 29 முதல், நவராத்திரி விழா இக்கோவிலில் நடந்து வருகிறது. தினமும், வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, கெஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதையொட்டி அம்மனுக்கு, 35 லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும், 150 பவுன் நகையால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.