70 நாட்களுக்கு பின் ரோப்கார் இயக்கம்
ADDED :2231 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் ‘ரோப்கார்’ 70 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. பழநி முருகன்கோயில் ‘ரோப்கார்’ ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 29–ல் நிறுத்தப்பட்டது. கம்பி வடக்கயிறு, உருளைகள், பெட்டிகள் கழற்றப்பட்டு அவற்றில் தேய்மானம் அடைந்த பாகங்கள் மாற்றப்பட்டது. கோல்கட்டாவில் இருந்து புதிய ஷாப்ட் உருளை வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு எடைகற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. ‘‘இன்று காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும்’’ என இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.---