ஆத்தூர் ஆயுத பூஜை வழிபாடு: கோவில்களில் ஜோர்
ADDED :2200 days ago
ஆத்தூர்: ஆயுத பூஜையையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட், வெள்ளை விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நேற்று (அக்., 7ல்) நடந்தது.
வெள்ளி கவச அலங்காரத்தில் வெள்ளை விநாயகர் அருள்பாலித்தார். இதேபோல் ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், சம்போடை வனம் மதுரகாளியம்மன், கைலாசநாதர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி காசி விஸ்வநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.