உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

புதுச்சேரியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று (அக்., 7ல்) ஆயுத பூஜை விழா உற்சாகமாக  கொண்டாடப் பட்டது.உழைப்புக்கு ஆதாரமான வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும்  தொழிலுக்கு பயன் படுத்தப்படும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்து,  நன்றிக் கடன் செலுத்தும் விதமாக, ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகிறது.  

புதுச்சேரியில் நேற்று (அக்., 7ல்) ஆயுத பூஜை விழா, வழக்கமான உற்சாகத்துடன்  கொண் டாடப்பட்டது.வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள்,  ஆட்டோ நிறுத்தங்கள், பஸ் டெப்போக்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன  நிறுவனங்களில் ஆயுத பூஜை விழா களை கட்டியது.

தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வாழை மரங்கள், வண்ண தோரணங்கள், மின் விளக்குகள் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வாகனங்களை சுத்தம் செய்யப்பட்டன, அவல், பொரி, சர்க்கரை, பழங்கள், இனிப்பு, சுண்டல் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.புதுச்சேரி பஸ் நிலையத்தில் தலைமை ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆட்டோ நிறுத்தத்தில் நடந்த ஆயுத பூஜை விழாவில், சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று, தொழிலாளர்களுக்கு பாத்திரங்களை அன்பளிப்பாக வழங்கினார்.போலீஸ் தலைமையகத்தில் ஆயுத கிடங்கு, போலீஸ் இசை கருவிகள் பிரிவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.  

தேங்காய்திட்டு துறைமுகத்தில், மீன்பிடி படகுகளை சுத்தம் செய்து, மாலை  மற்றும் தோரணங்களால் அலங்கரித்து பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !