உடுமலை அருகே வரதராஜ பெருமாள் புதிய சப்பர வீதியுலா
ADDED :2296 days ago
உடுமலை:உடுமலை அருகே பள்ளபாளையத்தில் ஸ்ரீ பூமிதேவி நீலா தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு மே 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
தற்போது புதிய சப்பரம் மற்றும் பஞ்சலோக விக்ரகம் எனும் ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி வரதராஜ பெருமாள் ஐம்பொன் சிலைகள் நுாத பிம்ப பிரதிஷ்டை வரும் 18ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
யாகசாலை பூஜைகள் வரும் 17ம், 18ம் தேதி நிறைவேள்வி, மகா அபிஷேகம் நடக்கிறது. வரும் 19ம் தேதி சிறப்பு அலங்காரம், அன்னதானம் மாலை, 6:30 மணிக்கு ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமிதாயார் வரதராஜ பெருமாள் புதிய சப்பரத்தில் திருவீதியுலா நடக்கிறது.