கடலுார் நவராத்திரி கொலு உற்சவம்
ADDED :2295 days ago
கடலுார்: கடலுார் வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு உற்சவம் நடந்து வருகிறது. கடலுார், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு உற்சவம் கடந்த 29ம் தேதி, துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, மாலை சகஸ்ரநாம அர்ச்சனை, பஜனை பாடல்கள், தீபாராதனை நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். கொலு உற்சவம் நாளை 9ம் தேதியுடன் முடிவடைகிறது.