உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு பூஜையுடன் பழநி ‛ரோப்கார் இயக்கம்

சிறப்பு பூஜையுடன் பழநி ‛ரோப்கார் இயக்கம்

பழநி, பழநி முருகன் கோயில் ரோப்கார் சிறப்பு பூஜையுடன் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. பழநி முருகன்கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 29ல் நிறுத்தப்பட்டது. கம்பிவடம், உருளைகள், பெட்டிகள் கழற்றப்பட்டு அதில் புதிய சாப்ட் மாற்றியுள்ளனர். சில நாட்கள் சோனை ஓட்டம் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜை செய்து, வழக்கம் போல பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. பூஜையில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !