துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :2489 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை துர்க்கையம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.