மணக்குள விநாயகர் தங்கத் தேரில் உலா
ADDED :2246 days ago
புதுச்சேரி: விஜயதசமியை முன்னிட்டு, தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா நேற்று நடந்தது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், விஜயதசமியன்று, மணக்குள விநாயகர் உற்சவர் தங்கத் தேரில் வீதியுலா வருவது வழக்கம். இதன்படி, விஜயதசமியான நேற்று மாலை, தங்கத் தேர் வீதியுலா நடந்தது. மாட வீதிகள் வழியாக நடந்த தேர் வீதியுலாவில், சிறப்பு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விநாயகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வீதி எங்கும் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.