மொரட்டாண்டி கோவிலில் விஜயதசமி பூஜை
ADDED :2294 days ago
புதுச்சேரி:மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், விஜயதசமி பூஜை நடந்தது. புதுச்சேரி அடுத்துள்ள மொரட்டாண்டியில், நவக்கிரக மற்றும் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு, விஜயதசமியை முன்னிட்டு, ஸ்ரீலலிதாம்பிகைக்கு, லட்சார்ச்சனை சகஸ்ர புஷ்பம், மகா தீபாராதனை, சுமங்கலி பூஜை நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதா சங்கர குருக்கள், கீதாராம குருக்கள் செய்திருந்தனர்.