பொம்மபுர ஆதின மடத்தில் நவராத்திரி சண்டி ஹோமம்
ADDED :2192 days ago
புதுச்சேரி: பொம்மையார்பாளையம் பொம்மபுர ஆதின மடத்தில், நவராத்திரி விழா நிறைவையொட்டி, லகு சண்டி ஹோமம் நடந்தது. விஜயதசமி தினமான நேற்று, 9 நாட்கள் நவராத்திரி பூஜைகளையும் ஒருங்கே நிகழ்த்தும் வகையில், புதுச்சேரி அடுத்த பொம்மையர்பாளையம் பொம்மபுர ஆதின மடத்தில், உலக நன்மை, மக்கள் நலன் வேண்டி, சிறப்பு லகு சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.அப்போது, பார்வதி, லட்சுமி, சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு புடவை உள்ளிட்ட பொருட்கள் தாம்பூலமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.