புதுப்பாளையத்தில் நவராத்திரி விழாவில் காளி சிலை விசர்ஜனம்
ADDED :2188 days ago
தொண்டாமுத்துார்:புதுப்பாளையத்தில், பொதுமக்கள் சார்பில், நவராத்திரி விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட காளி சிலை, நொய்யல் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
தொண்டாமுத்துார் அடுத்த புதுப்பாளையத்தில், நவராத்திரி விழாவையொட்டி, கடந்த செப்., 29ம் தேதி காளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒன்பது நாட்களும், காளிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வந்து காளியை தரிசித்து சென்றனர். நவராத்திரி முடிந்து, விஜயதசமியன்று காளி, அரக்கனை வதம் செய்தார். இதனையடுத்து, விஜயதசமி தினமான நேற்று, காளி சிலை, வீதி, வீதியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நொய்யல் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.