உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் தென் திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு

மேட்டுப்பாளையம் தென் திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், தென்திருப்பதியில், பிரம்மோற்சவ விழா  நேற்று அக்., 8ம் நிறைவு பெற்றது.தென்திருப்பதி, ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில்,  வருடாந்திர பிரம் மோற்சவ விழா செப்., 30ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. அக்., 4ம் தேதி கருட சேவை நடந்தது.நேற்றுமுன்தினம் அக்., 7ம் தேதி காலையில், தேரோட்டம் நடந்தது. நேற்று அக்., 8ம் தேதி காலை 8:00 மணிக்கு, மலையப்ப சுவாமி, ஸ்ரீ தேவி, பூதேவி சமே தரராக, மாட வீதிகளில் வந்து அருள்பாலித்தார்.

பின்னர் சக்ர ஸ்நானம் நடந்தது. மாலையில், சுவாமி உலாவுக்கு பிறகு  கொடியிறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !