தேவதைகள் தந்த ஆயிரம்!
ADDED :2212 days ago
பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற பகுதியில் அம்பிகைக்குரிய ‘லலிதா சகஸ்ரநாமம்’ இடம் பெற்றுள்ளது. ஒரு சமயத்தில் சிவபெருமானின் விருப்பத்திற்கேற்ப, பார்வதி சாந்த கோலத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது தேவியின் திருவாயில் இருந்து ‘வசினீ’ என்னும் எட்டு வாக் தேவதைகள் தோன்றினர். அவர்கள் போற்றித் துதித்த ஆயிரம் திருநாமங்களே ‘லலிதா சகஸ்ர நாமம்’ ஆகும். இதனை, உலக நன்மைக்காக திருமாலின் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தி அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அகத்தியர் மூலம் இம்மந்திரம் பூலோகத்திற்கு வந்தது. துர்க்காவின் திசைசிவன்கோயில் பிரகாரத்தில் துர்க்கை பரிவார தேவதையாக இருப்பாள். கயிலாயத்தை நோக்கி இவள் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் அவளது சிலையை வடக்கு நோக்கி அமைப்பர்.