அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :2189 days ago
ரிஷிவந்தியம்: திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி 10ம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கடந்த மாதம் 30ம் தேதி கொலு அமைக்கப்பட்டது.தொடர்ந்து 9 நாட்கள் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.முன்னதாக மாலை 7.00 மணிக்கு குதிரை வாகனத்தின் மீது உற்சவர் ரங்கநாத பெருமாள் சிலை அமைக்கப்பட்டு, கோவில் வளாகத்தின் முன் அம்புகுத்தி திருவிழா நடந்தது. கோவில் பட்டாச்சாரியார் ரங்கநாதன் வாழை மரத்தில் அம்பு எய்தினார். தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.