திருவாடானை மாரியம்மன் கோயில் விழா
ADDED :2235 days ago
திருவாடானை ; திருவாடானை வடக்கு ரதவீதி மாரிஅம்மன் கோயில் திருவிழா அக்.,2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பூக்குழி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால், பறவை, வேல் காவடிகள் எடுத்து தீ மிதித்தனர். அன்னதானம்,இரவில் அம்மன் வீதி உலா, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.