அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் விஜயதசமி விழா
ADDED :2292 days ago
அலங்காநல்லுார்:அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நவராத்திரி விழா நடந்தது. நேற்று 9ம் தேதி மாலை வன்னிகாசுரனை வதம் செய்யும் விஜய தசமி விழா நடந்தது.
இதையொட்டி சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் கோட்டை வாசல் அருகிலுள்ள அம்பு விடும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வன்னிகாசுரனை அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா செய்திரு ந்தனர்.
மேலுார்: கஸ்துாரிபாய் நகர் மகர்நம் பொட்டலில் மகிசாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பாலசரவணன், சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி செய்திருந்தனர்.