சூலுார் விஜய தசமி விழா மாவிளக்கு ஊர்வலம்
ADDED :2191 days ago
சூலுார்:சோமனுார் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விஜய தசமி விழாவை ஒட்டி, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.சோமனுார் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி கொலு பூஜை ஒன்பது நாட்கள் நடந்தன.
விஜயதசமி விழாவை ஒட்டி, நேற்று 9ம் தேதி சோமனுார் கிருஷ்ணாபுரம் விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம், மாவிளக்கு, முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பெண்கள், சிறுமி கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, அம்மனுக்கு, 108 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
அலங்கார பூஜை முடிந்து, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று 10ம் தேதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.