உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கருவறை கோபுரத்தில் மரங்கள் அகற்றம்

வீரபாண்டி கருவறை கோபுரத்தில் மரங்கள் அகற்றம்

வீரபாண்டி: கருவறை கோபுரத்தில் வளர்ந்த அரச மரங்கள் அகற்றப்பட்டன.  சேலம், உத்தம சோழபுரம், கரபுரநாதர் கோவிலில், 2006ல் கும்பாபிஷேகம்  நடந்தது.

12 ஆண்டு கடந்த நிலையில், கோபுரங்களில் மராமத்து பணி மேற்கொள்ளாததால், அரச மரங்கள் வளர்ந்து, விரிசல் உருவானதோடு, கோபுர  சிலைகள் சேதமடைந்தன. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம்  செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, கோவில் பணியாளர்கள், கருவறை கோபுரத்தில் வளர்ந்திருந்த அரச மரங்களை வெட்டி அகற்றினர். மேலும், கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், விரைவில் திருப்பணி குழு அமைத்து, மராமத்து பணி தொடங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !