உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெருமாளுக்கு திருமஞ்சனம்

ஈரோடு பெருமாளுக்கு திருமஞ்சனம்

ஈரோடு: தேரோட்டத்துக்கு பிறகு, கஸ்தூரி அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம்  நடந்தது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்க நாதர் கோவில் புரட்டாசி  தேர்த்திருவிழா கடந்த, 1ல் தொடங்கியது.

அன்று முதல் தினமும் இரவில் அன்னம், சிம்மம், கருடன் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.

தொடர்ந்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடந்தது. தேரோட்டத்துக்கு பிறகு, நேற்று சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) கோவில் கல்மண்டபத்தில் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி யுடன் எழுந்தருளிய சுவாமிக்கு பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.  

பின்னர் சுவாமி கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு,  7:00 மணிக்கு குதிரை வாகன சேவை நடந்தது. இன்று 10ம் தேதி தெப்போற்சவம், நாளை 11ம் தேதி ஆஞ்ச நேயருக்கு வடை மாலை சாற்றுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !