கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை
ADDED :2300 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி, ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. கோயிலில் நடந்த ஐந்து கருட சேவையில் வீரராகவப்பெருமாள், யாகபேரர், வியூக சுந்தரராஜ பெருமாள், மதனகோபால சுவாமி, ரெங்கநாதர் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.