பகவதி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு
ADDED :2189 days ago
கடலுார்: கடலுார் பகவதி அம்மன் கோவிலில், மண்டலாபிஷேக பூஜை நிறைவு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலுார், வில்வநகர் பகவதி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 108 சங்காபிஷேகம், யாக சாலை பூஜை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.