உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகண்டேஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக யாகம்

நீலகண்டேஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக யாகம்

தேவதானப்பட்டி: குள்ளப்புரம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் வழிபாட்டுக்குழுவினர் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தினர்.

பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் நீலகண்டேஸ்வரர் சுவாமி– அன்னபூரணித் தாயார் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதர் வழிபாட்டுக்குழுவினர் 11 வது ஆன்மிகப்பயணமாக நுாறுக்கும் மேற்பட்டோர் இக்கோயிலுக்கு வந்தனர்.  அவர்கள் சார்பில்   உலகநன்மைக்காக  வழிபாடுகள், கோமாதா பூஜை, யாகம், சிறப்பு அலங்கார, அபிஷேகம், அன்னதானம் நடந்தது. சில்வார்பட்டி. கோயில்புரம், மேல்மங்கலம், குள்ளப்புரம் கிராமங்களைச் சேர்ந்த  ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குள்ளப்புரம் சஷ்டிகுழு மெய்யன்பர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !