உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

சுபநிகழ்ச்சி நடந்தேறும். குரு அக்.28 வரை நன்மைகளை வாரி வழங்குவார். அதன் பிறகு அவர் சாதகமற்று இருந்தாலும் கவலை வேண்டாம். காரணம்  சுக்கிரன் அக்.29ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். சூரியன், புதன், ராகு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். நினைத்தது நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சமூக மதிப்பு உயரும். பொன், பொருள் சேரும்.  பெண்கள் உறுதுணையாக  இருப்பர். அவர்களால் மனதில் நிம்மதி நிலைக்கும். அக்.28க்கு பிறகு பணவரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பெண்களுக்கு சகோதரி வகையில் பணஉதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு மறையும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.  நவ.12 க்கு பிறகு செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்கள் தொழில்ரீதியான பயணம் சென்று வெற்றியுடன் திரும்புவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் பெறும்.
வியாபாரிகள் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.
தரகு, கமிஷன் தொழில் அக்.28க்கு பிறகு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
எதிரி தொல்லை அடியோடு மறையும்.
அரசு பணியாளர்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஐ.டி., துறையினருக்கு சக ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.  
மருத்துவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தொழிலில் சாதனை படைப்பர்.
வக்கீல்களுக்கு அதிகாரம் கொடி கட்டி பறக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமாக முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகளுக்கு அக்.28க்கு பிறகு  தலைமையிடம் செல்வாக்கு உயரும்.  
கலைஞர்கள் அக்.28க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன மறையும்.
விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் குறைவிருக்காது. பாசி பயறு, நெல், உளுந்து, சோளம், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் வருமானம் உயரும்.
பள்ளி மாணவர்கள் புதனால் உழைப்புக்கு ஏற்ற பலன் பெறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வர். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம்
வியாபாரிகள் அக்.28க்கு பிறகு பணவிஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. பொருள் களவு கொடுக்க நேரிடலாம்.
அரசு பணியாளர்களுக்கு மாத பிற்பகுதியில் வீண்கவலை, குழப்பம் உருவாகும்.
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிலருக்கு  பணிச்சுமை ஏற்படலாம்.     
ஐ.டி., துறையினருக்கு நவ. 12க்கு பிறகு வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.
மருத்துவர்கள் பணவிஷயத்தில் விட்டுக் கொடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
ஆசிரியர்கள் அக்.28க்கு பிறகு வீண் அலைச்சலால் சிரமப்படுவர்.  
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலையில் விழிப்பாக இருக்கவும்.  
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு தள்ளிப்போகும்.
கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் ஒப்பந்தம் பெறுவதில் கடின முயற்சி தேவை.  

* நல்ல நாள்: அக்.19,20, 21,22, 23,28,29,30,31, நவ.3,4,5,8,9,10,16
* கவன நாள்:  அக்.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்: பச்சை, சிவப்பு

* பரிகாரம்

●  சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
●  செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்
●  பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !