உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்!

திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்!

சேலம்: சேலம், அழகாபுரம் திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.சேலம், அழகாபுரத்தில் உள்ள பிரஸித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் திருவிழா மார்ச் 29ம் தேதி கொடி÷ற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, வாணவேடிக்கை, கரகம், மயில் நடனம், ஸ்வாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம், திரவுபதி அம்மனுக்கு தினை வாங்கி விதைத்தல், சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, அரவாணை போருக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு ஸ்வாமி ஊர்வலம், பகல் 11 மணிக்கு அர்ச்சுனன் தபசு, மதியம் 12 மணிக்கு அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடந்தது. மதியம் 2 மணிக்கு, துரியோதனர்களின் கோட்டை தகர்த்தல், அர்ச்சுனன் மாடு பிடி சண்டை நடந்தது.இதை தொடர்ந்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். குண்டம் விழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரவுபதி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !