வேண்டாமே வெறுப்பு
ADDED :2242 days ago
மதினா நகரில் இருந்த ஒருவர், “எங்கள் நாயகத்திற்கு தான் இறைவன் மேன்மை அளித்துள்ளான்“ என்றார். இதைக் கேட்ட யூதர் ஒருவர், “இல்லை. மூஸா தான் இறைவனின் மேன்மையைப் பெற்றவர்“ என மறுத்தார். வாக்குவாதம் கைகலப்பாகி யூதருக்கு பலத்த அடி விழுந்தது. இதை கண்டித்த நாயகம், “என் சகோதரர் மூஸாவை விட என்னை உயர்த்திப் பேசாதீர்“ என தெரிவித்தார். மனம் நெகிழ்ந்த இருவரும் வெறுப்புணர்வை கைவிட்டனர்.