உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பு பயத்தை போக்கும்

அன்பு பயத்தை போக்கும்

சிறுவன் ஒருவனை பாம்பு தீண்ட இறந்தான். கோபம் அடைந்த தந்தை பாம்பைக் கொல்ல கோடரியுடன் புறப்பட்டார். புற்றின் அருகே காத்திருந்த அவர், வெளியே வந்த பாம்பை கோடரியால் தாக்கினார்.  வால் மட்டும் வெட்டுப்பட்ட பாம்பு, புற்றுக்குள் ஓடி மறைந்தது.  அடிபட்ட பாம்பு தன்னை பழி வாங்குமோ என பயம் எழுந்தது.  பாம்பிடம் நட்பு கொள்ள முடிவெடுத்தார்.  கிண்ணம் நிறைய பாலுடன் அதைக் காண நின்றார். வெளியே தலையை நீட்டிய பாம்பு, “மனிதனே! தீண்டுவது என் இயல்பு. அதற்காக என்னைப் பழி வாங்கத் துடிப்பது நியாயம் ஆகாது.“ என்றது. தவறை உணர்ந்த தந்தையின் மனதிலும் அன்பு, அமைதி, சமாதானம் போன்ற நற்குணங்கள் உண்டாயின. பயம் வேதனையைத் தரும். ஆனால் அன்பு பயத்தை புறந்தள்ளி விடும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !