உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் திதி பொட்டலில் பக்தர்கள் தவிப்பு

திருப்புவனம் திதி பொட்டலில் பக்தர்கள் தவிப்பு

திருப்­பு­வ­னம்: திருப்­பு­வ­னம் வைகை ஆற்­றங்­கரை திதி பொட்­ட­லில் அடிப்­படை வசதி இன்றி பக்­தர்­கள் வெயி­லி­லும் மழை­யி­லும் தவித்து வரு­கின்­ற­னர்.

புஷ்­ப­வ­னத்து காசி எனப்­படும் திருப்­பு­வ­னம் நகர் வைகை ஆற்­றங்­க­ரை­யில் மறைந்த முன்­னோர்­க­ளுக்கு திதி, தர்ப்­ப­ணம் கொடுத்­தால் மிக­வும் புண்­ணி­யம் என இந்­துக்­கள் கரு­து­கின்­ற­னர். திருப்­பு­வ­னம் வைகை ஆற்­றில் முன்­னோர்­க­ளுக்கு திதி, தர்ப்­ப­ணம் கொடுக்க தின­மும் பலர் வந்து செல்­கின்­ற­னர். நுாறு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக வணங்­கப்­பட்டு வரும் திதி பொட்­ட­லில் எந்த வித அடிப்­படை வச­தி­யும் இல்லை. வெயி­லி­லும் மழை­யி­லும் பக்­தர்­கள் அவ­திப்­பட்டு வரு­கின்­ற­னர். வைகை ஆற்­றங்­க­ரை­யில் உள்ள திதி பொட்­ட­லில் குளிக்­கவோ தாகம் தீர்க்க குடி­நீர் வச­தியோ கிடை­யாது. வைகை ஆற்­றில் இறங்­கும் படித்­து­றை­ சே­த­ம­டைந்து பல ஆண்­டு­க­ளா­கி­யும் இன்று வரை சரி செய்­யப்­ப­ட­வில்லை. மக்­கள் அமர இட­வ­சதி இல்லை. அரு­கில் உள்ள கடை வாச­லில் அமர வேண்­டி­யுள்­ளது. மாவட்ட நிர்­வா­கம் திதி பொட்­ட­லில் போதிய வசதி செய்­து­தர உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பக்­தர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !