திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை
ADDED :2183 days ago
திருமலைக்கேணி : சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், மஞ்சள்நீர், விபூதி, தயிர், புஷ்பம், பஞ்சாமிர்தம், பன்னீர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து மூலவர் சுவாமி புறப்பாடாகி கோயில் வளாகத்தில் வலம் வந்தார். இதன்பின் அருகிலுள்ள மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.