மேல்மங்கலம் முத்தையா கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா
ADDED :2278 days ago
தேவதானப்பட்டி : மேல்மங்கலம் முத்தையா கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. வடுகபட்டி யில் இருந்து குதிரை அழைத்து வரப்பட்டது. பொங்கல் வைத்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனுக் காக அக்னி சட்டி எடுத்து, முடிகாணிக்கை செலுத்தினர். வடுகபட்டி, சேடபட்டி, சில்வார்பட்டி, கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்