வீருகண்ணம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2176 days ago
கூடலுார் : கூடலுார் ஸ்ரீமது வீருகண்ணம்மாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கூடலுார் ஒக்கலிகர் பூசிவார் குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமது வீருகண்ணம்மாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
முன்னதாக பூர்வாங்கபூஜை, விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், கலசபூஜை, கோ பூஜை, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில், வேதபாராயணம், திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடல் சுந்தரவேலவலர் கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோயில் அர்ச்சகர் ஏகாம்பர சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் பூசிவார் குல தாயாதிகள் செய்திருந்தனர்.