பரவையில் புரட்டாசி பால்குட திருவிழா
ADDED :2472 days ago
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இக்கோயில் விழா அக்.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர். நேற்று வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கருப்பணசாமி கோயிலில் பொங்கல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.