அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன்
ADDED :2230 days ago
புதுச்சேரி: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்புராயபிள்ளை வீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 29ம் தேதி துவங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. அதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.