மடத்துக்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம்
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தில் பழமையான ஞானதண்டாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபடுகின்றனர்.
கந்த புராணத்தின் முக்கிய நிகழ்வாக குறிப்பிடப்படும் சூரசம்ஹார விழா இன்று தொடங்கி, நவ.,3ம் தேதி வரை நடக்கிறது. இன்று 28ம் தேதி காலை முதல் தினசரி ஐந்துகால பூஜைகள், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரவு, 7:00 மணிக்கு மேல் இந்திரவிமானம். ஆட்டு கிடா, நீலமயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
வரும் நவ.,2ம் தேதி மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹார பெருவிழாவும், 3ம் தேதி மாலை, 5:30 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல் யாணமும் நடக்கிறது.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ’சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள் இன்று, காலை 11:00 மணிக்கு கோவிலுக்கு வந்து காப்பு கட்டிக்கொள்ளலாம். இதோடு தினசரி பூஜைக்கு, பால், தயிர் சந்தனம், பன்னீர், இளநீர், வஸ்திரங்கள், நல்லெண்ணெய், நெய் வழங்கலாம்’ என்றனர்.