கோபியில் தீபாவளி, அமாவாசையால் கோவில்களில் கோலாகலம்
ADDED :2141 days ago
கோபி: கோபி கோவில்களில், ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டி கை மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், ஏராள மான பக்தர்கள் நேற்று 28ம் தேதி காலை முதல் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், காலை முதல் மாலை வரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பெரும்பாலான கோவில்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.