உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி அம்மன் கோவிலில் வழிபாடு

கிருஷ்ணகிரி அம்மன் கோவிலில் வழிபாடு

கிருஷ்ணகிரி: தீபாவளியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கவுரி நோன்பு எடுத்து, அம்மன் கோவிலில் பெண்கள் வழிபாடு செய்தனர். ஐப்பசி அமாவாசையில் கவுரி நோன்பு எடுப்பது வழக்கம். நேற்று 28ம் தேதி அமாவாசை என்ப தால், வீட்டில் அதிரசம் பலகாரத்தை செய்த பெண்கள், அதை புதுப்பானையில் போட்டு, நோன்பு கயிறு, தேங்காய், வாழைப்பழம் வைத்து அருகில் உள்ள அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். தீபாவளியையொட்டி குழந்தைகள் பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !