உறவினருக்கு கை கொடுங்கள்
ADDED :2253 days ago
நோய் வாய்ப்பட்ட ஒருவர் மரணத் தறுவாயில் இருந்தார். அவரைக் காண வந்த நாயகம், “நீர் மரண சாசனம் ஏதும் எழுதியுள்ளீரா?” எனக் கேட்டார். தலையாட்டிய அவரிடம் “எப்படி எழுதியுள்ளீர்?” எனக் கேட்டார். “என் சொத்து முழுவதையும் இறைவழியில் செலவிட வேண்டும் என எழுதியுள்ளேன். ஏனெனில் என் பிள்ளைகள் செல்வச் செழிப்புடன் உள்ளனர்” என்றார். “உம் சொத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவழியில் செலவழித்தால் போதும். இது மிக குறைவு எனக் கருதினால் மூன்றில் ஒரு பங்கை சொத்தை அதிகபட்சமாக இறைவழிக்காக கொடுக்கலாம். அதற்கும் முன்பாக நெருங்கிய உறவினர்களுக்கு குடும்பத்திற்கு உதவ வேண்டும்” என்றார்.