உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சாரம் முருகர் கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி சாரம் முருகர் கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார  பிரம்மோற்சவ விழா நாளை 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சாரத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு,  விக்னேஸ்வர பூஜை நடந்தது.

தொடர்ந்து, இன்று 29ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் காப்பு கட்டப்பட்டு, கொடியேற்றப்படுகிறது. மாலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இரவு, சுவாமி வீதியுலா நடக்கிறது.

பிரம்மோற்சவத்தின் 6வது நாள் திருவிழாவான வரும் 2ம் தேதியன்று  மாலையில் சூரசம் ஹார உற்சவமும், மறுநாள் 3ம் தேதியன்று மாலை 7:00  மணியளவில் சுவாமிக்கு திருக் கல்யாண உற்சவமும் நடக்கிறது.வரும் 7ம் தேதி,  விடையாத்தி உற்சவத்துடன் பிரம்மோற் சவ திருவிழா நிறைவடைகிறது.விழா  ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்கரலிங்கம், துணைத்  தலைவர் ரங்கராஜ், செயலர் பாலமுருகன், பொருளாளர் கண்ணன், உறுப்பினர்  இளஞ்செழியன் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !