உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் ரிஷிவந்தியம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

தியாகதுருகம் ரிஷிவந்தியம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

தியாகதுருகம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா  கொடியேற்றத் துடன் துவங்கியது.

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத  சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று  முன்தினம் (அக்., 28ல்) மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேன் அபிஷேகமும்; சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.அதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி சன்னதி எதிரில் நவவீரர்கள் காப்பு கட்டினர். பின்னர் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர்.

இரவு சர்வ அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 1ம் தேதி கம்பம்  ஏறும் நிகழ்ச் சியும் 2ம் தேதி சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. 3ம் தேதி  சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை  செங்குந்தர் சமூகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !