உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

விழுப்புரம் : விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில்  குருபெயர்ச்சியை யொட்டி, தட்சணாமூர்த்தி சுவாமி தங்க கவசத்தில்  அருள்பாலித்தார்.

குரு பெயர்ச்சியை யொட்டி, விழுப்புரம், பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர்  கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு குரு தட்சணாமூர்த்திக்கு சிறப்பு  அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்க கவசத்தில்  அருள்பாலித்தார். 9:30 மணிக்கு சிறப்பு தீபாரா தனை நடந்தது.முன்னதாக, நேற்று  முன்தினம் (அக்., 28ல்) இரவு, குரு பரிகார ஹோமங்கள், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டிவனம்திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள தீவனுார் பொய்யாமொழி  விநாயகர் கோவிலில் உள்ள குருபகவானுக்கு, குருபெயர்ச்சியை முன்னிட்டு,  நேற்று (அக்., 29ல்) அதிகாலை 3:00 மணியளவில் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. 4:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கண்டாச்சிபுரம்கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள குரு  பகவானுக்கு நேற்று 29ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருமஞ்சன சிறப்பு பூஜை மகா ஆரத்தியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !