பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் விளக்கு பூஜை
ADDED :2206 days ago
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சூரசம்ஹார விழாவில் நேற்று முன் தினம், விளக்கு பூஜை நடந்தது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கடந்த 28ல் காப்புகட்டு நிகழ்ச்சியுடன் சூரசம்ஹாரம் விழா துவங்கியது.இவ்விழாவில், நேற்று முன் தினம் இரவு 7.00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. இதில், சஷ்டி வழிபாட்டு குழுவினர் சார்பில் 50 பெண்கள் பங்கேற்று விளக்கு முன்பு அமர்ந்து, பூஜை செய்து, தீபராதனை காண்பித்து, வழிபாடு செய்தனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.