உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி அருகே பவளமலை முருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

கோபி அருகே பவளமலை முருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே பவளமலை முருகன் கோவிலில், லட்சார்ச்சனை விழா கோலாகலமாக நேற்று (அக்., 30ல்) நடந்தது. கோபி பச்சமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் விழா கடந்த, 28ல், துவங்கியது. மூன்றாம் நாள் நிகழ்வாக, யாகசாலையில் ஹோமம், சண்முகர் அர்ச்சனை நடந்தது.

இதேபோல், கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம் ஹாரம் விழா துவங்கியது. மூன்றாம் நாள் நிகழ்வாக, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின் லட்சார்ச்சனை, யாகசாலை பூஜை, திரவிய ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !