உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் கந்த சஷ்டி விழா

சென்னிமலை முருகன் கோவில் கந்த சஷ்டி விழா

சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா மூன்றாம் நாளான நேற்று 30 ம் தேதி, கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் காலை யாக பூஜைகள் நடந்து வருகின்றன. அதை தொடர்ந்து பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட, 108 வகையான திரவியங்களுடன் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

சென்னிமலை பகுதியில், நேற்று 30 ம் தேதி பலத்த மழை பெய்தாலும் மூன்றாம் நாள் என்ப தால், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவ., 2ல் மாலை, 5:00 மணிக்கு சென்னிமலை மலை மேல் இருந்து, படிக்கட்டுகள் வழியாக, உற்சவமூர்த்திகளை அடிவார த்திற்கு அழைத்து வருவர். இரவு. 8:00 மணிக்கு மேல், நான்கு ராஜ வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3ல் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !