வடபழநி ஆண்டவர் கோவிலில் சூரசம்ஹாரம்
ADDED :2209 days ago
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், மகா கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக, சூரசம்ஹார உற்சவம் நடந்தது.
வடபழநி ஆண்டவர் கோவிலில், அக்., 27ம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழாவில், நேற்று காலை, உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அரங்கேறியது நேற்று மாலை, அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய, முருகப் பெருமான் புறப்பட்டார்.
இரவு, 7:00 மணிக்கு, சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது.பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷமிட்டனர். இன்று இரவு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை முதல், 7ம் தேதி வரை சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது.